5-வது தூணின் மாத இதழ்
  • இயக்க செயல்பாடுகளை மக்களிடம் கொண்டு செல்ல...
  • லஞ்சம் வாங்குபவருக்கு இனி அது முடியாது என்பதை உணர்த்திட...
  • லஞ்சம் இல்லாமல் காரியம் நடக்கும் என்ற நம்பிக்கையை மக்களுக்கு உண்டாக்க...
மே 2009 முதல் உதயமாகி உள்ள எங்களது “மாற்றம்" என்ற மாத இதழ், தமிழகம் முழுவதும் மட்டுமல்லாது, இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும், அமெரிக்கா, கனடா, துபாய், சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களையும் சென்று சேரும் வண்ணம் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளிலும் வெளிவரவிருக்கிறது.

சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் வடிவில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தக் கூடிய அம்சங்களுடன் அனைவரையும் கவரும் விதத்தில் 5-வது தூணின் மாத இதழ் வெளிவர இருக்கிறது.

லஞ்ச ஊழலிலிருந்து இந்தியாவைக் காப்பாற்றி, வெளிப்படையான - நேர்மையான அரசாங்கத்தை உடைய வளமிக்க நாடாக உருவாக்க ஊர் கூடி தேர் இழுத்தால் மட்டுமே முடியும். அந்த மாற்றத்தைக் கொண்டுவர நிச்சயம் நீங்களும் பங்கு கொள்வீர்கள் என்று 5-வது தூண் நம்புகிறது.

லஞ்ச ஊழலிலிருந்து இந்தியாவைக் காப்பாற்ற 5-வது தூணின் “மாற்றம்" என்ற மாத இதழில் விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள - அல்லி, செய்தி மற்றும் ஊடக ஒருங்கிணைப்பாளர், மாற்றம்,
இ-மெயில்: maattram@5thpillar.org
 
 
லஞ்ச ஊழலிலிருந்து இந்தியாவைக் காப்பாற்ற 5-வது தூணின் “மாற்றம்" என்ற
மாத இதழ் மே 09/2009 முதல் உதயமாகி உள்ளது


 
 
 
எங்களது “மாற்றம்" மாத இதழ், உங்கள் இல்லம் தேடிவர subscribe_maattram@5thpillar.org